என்ன வரம் பெற்றேன், உன் விழி
அசைவில் என்னுயிர் அசைந்த்ததேன்
தினம் உன்முகம் காண துடிப்பதேன்
கண்கள் முன்னாள் இது கனவா நிஜமா
கையில் சிக்கா கூந்தல் இழைகள்
என் முகத்தில் பட்டு தெரிப்பதென்ன
புகைப்படங்கள் அசைவதில்லை
கொஞ்சும் தமிழ் உரைப்பதில்லை
ஓரக்கண்ணில் எனை எனக்கூணர்த்துவதில்லை
உன்முகம் பார்தால் நிம்மதியாகும்
உன்குரல் கேட்டால் என்வலி தீரும்
கரம்கோர்து நடந்தால் என்மனம் பூக்கும்
விண்ணில் எட்டி வின்மீண் பிடிக்கும்
இன்னும் எத்தனை தவம் செய்வேன்
உயிர்காதல் என்னை வதைப்பதென்ன
நீயில்லை யென்றால் வெறும் மூச்சிங்கு.
தனிமை ஒன்றே தங்கும், சேர்த்த
கனவுகளும், ஆசைகளும் தன்வழிசெல்லும்.
இன்னும் எத்தனை தவம் செய்வேன்
அன்புள்ளம் என்னை சேர்வதெப்போ?




